ஜீவமுரளியால் எழுதப்பட்ட “வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை” என்னும் இக்கட்டுரை திணிக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தில் போராளியாகிப் பின்னர், புலங்கள் பெயர நேரும் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் சட்டகங்களில் ஓர்மத்தின் உயிர்ப்பை ஜீவமுரளியின் பதிவுகள் நெடுகிலும் காணலாம். சாதியக் கொடுமைகளை வாழந்து பெற்ற அனுபவத்தின் வலியில் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள் சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில், அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் செய்ய மறுக்கும் தனித்த தனித்துவமிக்க ஒரு குரல் இந்தப் பதிவுகளில் ஒலிக்கின்றது.
இவரால் எழுதப்பட்ட மற்றொரு நாவல் “லெனின் சின்னத்தம்பி”. முள்ளுக்கம்பிகளால் சூழப்பட்ட மனித இருப்பு, கடிகாரத்தின் முட்களால் துரத்தப்படும் வாழ்வு, உழைப்புச் சுரண்டலையே தனது மூலவேராகக் கொண்டு உலகம்பூராவும் வியாபித்துள்ள முதலாளித்துவ முள்விருட்சம் தனது கையடக்க நிறுவனமயாமாக்கலை தொழிலாளர் குடும்பங்களின் வழியேதான் தக்க வைத்துக்கொடிருக்கிறது என்பதை இந்நாவல் கதையின் பல மூலைகளின் நின்று சொல்லியிருக்கிறார்.
Be the first to rate this book.