வரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா? இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்டும் கதைகளிலிருந்து நவீன நிபுணர்களின் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் வரை நம்மை அழைத்துச் செல்வதன் மூலம் ஒரு துறை என்ற வகையில் ‘வரலாறு’ எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும், வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம் என்ற இந்நூல் கடந்த காலத்துடன் நமக்குள்ள உறவைப் புலப்படுத்துகிறது. கால வரிசைப் படுத்தல், காரணகாரிய வாதம் போன்ற வறண்ட கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டாலும் இவை வறண்ட இருண்மையான நடையில் அமையவில்லை. மாறாக இடைக்காலக் கொலைகாரன், பதினேழாம் நூற்றாண்டுக் காலனிய மனிதன், முன்னாள் அடிமைப் பெண் போன்றவர்களை உள்ளடக்கிய குறிப்பான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்கொண்டு வரலாற்றை நாம் எப்படிப் படித்தோம் எப்படிப் புரிந்துகொண்டோம் என்பதை விவரித்தும் விளக்கியும் செல்கிறது. இதன் மூலம் வாசகர்களுக்குக் கடந்த காலத்தை மட்டுமல்ல
தம்மைத் தாமே கண்டறியவும் மனக் கிளர்ச்சியினையூட்டும் வகையில் அமைந்துள்ளது.
Be the first to rate this book.