‘ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும்’ என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது.
சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.
மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும்.
இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன்
பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.
Be the first to rate this book.