வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்!
Be the first to rate this book.