பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும்.
அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.
VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.
Be the first to rate this book.