நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு வந்தாரங்குடியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய இம்மண்ணுக்காக வாழ்வுரிமைக்காக போராடிய மக்களது உணர்வுகளின் போராட்டத்தினை இயல்பாய் படம் பிடித்து காட்டியது போல உருவெடுத்துள்ளது கண்மணி குண்சேகரனின் இந்த நாவல்.
ஊமைக்காற்றுக்கும் வழியின்றிச் சலனமற்று நின்றுக் கொண்டிருந்த மரம் செடி கொடிகள் , துள்ளும் நீர்ச் சலனங்களில்... மெல்ல சோம்பலை முரிக்கும் இள்ங்காலை, தலைக்குமேல் நிமிர்ந்து நிற்க்கும் கதிர்கள், தாய்மடிபோல இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கின்றப் பரிவு இமாதிரியான அரிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். இந்த நூலில் வரும் மாந்தர்களின் கதாபாத்திரங்கள் அரிதாரம் பூசிக் கொள்ளாது இயற்கையான முகபொலிவுடனே உலா வருகிறார்கள் தமிழ் நாவல் உலகில் வந்தாரங்குடிக்கு நிரந்தர இடம் உண்டு என்று சொன்னால் அதற்கு மிகையாகாது.
Be the first to rate this book.