தனிமையின் மீதான அந்தரங்கமான உரையாடல்களைக் கட்டமைத்து, தனக்கேயான மொழி நடையில் விரிக்கும் நிலக்காட்சிகளில் அகவயமாய் ஊடாடும் பெண்மனநிலை மென்உணர்வுகளை புலன்களுக்கு அப்பால் வரை விரித்துச்செல்கின்றன மின்ஹாவின் கவிதைகள்.
இருத்தல் சார்ந்த பார்வையும் அதன் நேர்த்தி சார்ந்த ஓர்மைகளில் இருந்து விடுபட எத்தனிக்கும் அல்லது சேர்ந்தொழுக நேர்கையில் அடையும் மனநெருக்கடிகள் பாடுபொருள்களாகின்றன.
கூட்டுப்புழுவின் பிழைத்தல் நிறையுடலியின் அகவயமான முழுமை வரை சங்கேத மொழியில் காத்திருக்கச்செய்கிறது. புறவுலகின் அஜீரணத்தை செரிக்கும் தப்பித்தலை ரூப அரூபவெளிகளில் நிகழ்த்திக்காட்டுகிறது வண்ணத்திக்காடு.
Be the first to rate this book.