தமிழ்ச் சிறுகதையில் புதுமைப்பித்தனுக்கு அடுத்துப் பல்வேறு உத்திகள், கூறல்முறைகள், உலகங்கள் மற்றும் மனிதர்களைக் கையாண்டு, அவற்றைக் கலை அனுபவமாகவும் ஆக்கிய சிறுகதையாளர் வண்ண நிலவன். இல்லாமையிலும் போதாமையிலும் அவதிப்படும் ஏழை, நடுத்தரக் குடும்ப மனிதர்களின் வாழ்க்கை, அவர்களது சுகதுக்கங்கள், வெளிப்படுத்த முடியாத நேசங்களை இவர் தன் கதைகளில் பதிவுசெய்தவர். அவர் எழுதிய எஸ்தர், அயோத்தி, கரையும் உருவங்கள், பாம்பும் பிடாரனும் போன்ற சிறுகதைகள் இன்றைக்கும் உலகத்தரத்தில் எழுதப்பட்ட படைப்புகளுக்கு இணையாக வைக்கக் கூடியவை. வண்ணநிலவன் சிறுகதைகளின் முழுத்தொகுப்பை நற்றிணை பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.