இந்த நாவல் சாதியின் உள் அரசியலை பேசுவதாலேயே சிறப்பு பெருகிறது. பள்ளர், பறையர் என இரு பிரிவினர் க்கு இடையில் நடக்கும் வன்மம் அதை எப்படி மேல்தட்டு வர்க்கம் அனுகுகிறது என விவரிக்கிறது. கல்லுரியில் படிக்கும் இளைஞர்கள் சாதியை எப்படி அனுக்கிறார்கள் என மிக நுட்ப பார்வையையும், பட்டைய படிப்பு மட்டும் சாதியை தகர்க்காது என செரிவான கருத்தை கதை வடிவத்தல் எழுதி இருக்கிறார். கீழ தெரு, மேல தெரு என இரு பிரிவு லாக பிரித்து அவர்களுக்குள் தனி கிணறு, குளம் என இன்றும் நடைமுறையில் இருக்கும் பல பகுதிகளை சுட்டிக்காட்டுகிறது. தலைவர்களை சாதிக்குள் அடைக்கும் அரசியல் மனதில் வன்மத்தோடு மனிதாபிமானம் இல்லாமல் சரமாரியாக நடக்கும் போக்கு இப்படி நடக்கும் வன்மத்திற்கு அரசின் செயல்பாடு என அனைத்தையும் தொட்டு செல்கிறது. வயல் வேலையில் இருவர் அடித்துக் கொள்வார்கள் பஞ்சாயத்தில் வயலும் உனதில்லை யார் வீட்டு வயலுக்கோ நீங்க ஏண்டா அடிச்சிக்கிறிங்க என வசனம் வரும். அதுவே புத்தகத்தின் மையம்.
Be the first to rate this book.