நாவலை வாசிக்கும் போது தங்களது வறுமைக்காக இங்கு வந்து வேலைகள் பார்க்கும் வடமாநில மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்த மக்களிடம், குறிப்பாக வர்க்கத்தின் கடைநிலையில் இருப்பவர்களையும் நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேள்விகளும் எழுகிறது. நாவலில் வருவது போல் அவர்கள் சங்கம், போராட்டம் என்று ஆரம்பித்தால் எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுப்போம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் பொருளாதாரத் தேடலுக்காக இடம்பெயரும் மனிதர்களின் போராட்ட வாழ்வு இந்த நாவல் என்று சொல்லத் தோன்றுகிறது.
Be the first to rate this book.