தனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன.
நாவலில் இடம்பெற்றுள்ள சிறப்புப்பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொண்டிக்கின்றன. வனங்களில் கிடைக்கும் கனிம வளத்திற்காக அவ்வனங்களில் பல தலைமுறைகளாக வசித்துவரும் பழங்குடிஇன மக்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுவரும் இன்றைய அரசியல் சூழலில் காடுகளை நேசிக்கக் கற்றுத்தரும் இந்த மொழிபெயர்ப்பு நாவலின் மீள்பதிப்பு தேவையான ஒன்றாகவே உள்ளது.
Be the first to rate this book.