இயற்கையை, காதலை, பெண்களை, குழந்தைகளைக் காற்றைப் போலத் தழுவி நேசித்துப் பேரன்பை வெளிப்படுத்தும் இந்தக் கவிதைகள் அகதிகளின் ஆற்றாமையை, சாதி மத வேறுபாடுகளை, மனித உரிமையை, மண்ணையும் மானுடத்தையும் உயிர்குலைக்கும் உலகமயத்தை எதிர்த்தும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.
புலம் பெயரும் துயர்ப் பயணத்தில், துருக்கியின் கடலோரம் கரையொதுங்கிக் கிடந்த மூன்று வயதுக் குழந்தை அய்லான், சாதியக் கொலையின் விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட விஷ்ணுப்பிரியா ஐ.பி.எஸ், மத வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எழுத்தாளர் கல்பர்கி - இவர்களெல்லாம் இந்தக் கவிதைகளின் வழி நின்று நம்மை நிலைகுலைக்கிறார்கள். நின்று யோசிக்க வைக்கிறார்கள்.
"மொழியில், சொல்லில் எவ்வளவு உயரத்திற்குப் போகிறான்...மிகக் குறைந்த வரிகள்; சொல்லால் பொருள் நோக்கி / தாண்டிப் போகிற கவிதை; எங்கே பார்த்தான்; எப்படிப் பார்த்தான்; எப்படிச் சொல்கிறான்; எவ்விதம் கவிதையாகத் திரண்டு வந்திருக்கிறது; தந்தையிடமிருந்து வந்ததா; தமிழ் மரபிலிருந்து வந்ததா; எங்கிருந்து வந்தன இந்தத் தமிழும் கவிதையும்?" என வினவி இந்தக் கவிதைகளை முன்னுரைக்கிறார், தமிழின் தவிர்க்க முடியாத கவியாளுமையான விக்ரமாதித்யன்.
Be the first to rate this book.