நகரத்து கோயில் வாசலில் தேங்காய் பொறுக்கும், கிராமத்தில் தென்னந்தோப்பு வைத்திருந்த பாட்டியைப் பதிவு செய்யும் கே.ஸ்டாலின். கிராமத்திலும், நகரத்தில் மாறிமாறி தான் கண்ட எளிய மனிதர்களையே எந்த கற்பனையுமின்றி தன் கவிதைகளில் பதிவு செய்கிறார். வண்டி வண்டியாய் மணலள்ளியதால் மலடான நதியையும் நெஞ்சுருகப் பாடுகிறார்.
உயிர் மழை
‘‘மயானப் பாதையெங்கும்
உதிர்ந்து ஒதுங்கிய
உலர்ந்த சாமந்திப் பூக்களை
முளைக்கச்
செய்வதன் மூலம்
இறந்தவர்களை
உயிர்ப்பித்துவிடுகிறது
கோடையின் முதல் மழை’’
Be the first to rate this book.