இயற்கையை பற்றியோ, இயற்கை விவசாயம் பற்றியோ எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிப்பது என்பது நம்மில் பலருக்கும் இயலாத செயல். குறைந்தபட்சம், அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகமாவது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும்போது இயற்கை மீதான ஓர் பார்வை அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.
வனம், வானம், வாழ்க்கை புத்தகம் அத்தகைய முன்னோடிகளை பற்றியே பேசுகிறது. கூடவே, பண்டைய தமிழ் சமூகம் தொட்டு, தற்போது வரை நம்முடனே பயணிக்கும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகளை இலக்கிய ஆதாரங்களுடன் இப்புத்தகத்தின் பின்பகுதி பேசுகிறது.
பாம்பு, தவளை, மயில், தேனீ என்று பல்வேறு விதமான உயிரினங்கள் தொடர்பான சங்க இலக்கிய பாடல்கள், பக்தி இலக்கிய பாடல்கள், அவற்றின் வாழ்வியல், தற்கால சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அந்த உயிரினங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளும் இதில் அடக்கம்.
Be the first to rate this book.