உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவிடுகிறது.
அங்கேயே சிறிது நேரம் வட்டமடித்த காக்கை பிறகு ஏமாற்றத்துடன் வேறு இடத்தை நோக்கி பறந்துவிடுகிறது. நீண்ட நேரம் கழித்து மெதுவாக குழியைவிட்டு வெளியே வந்த எலிக் குஞ்சு அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு நிம்மதியாக மூச்சு வாங்குகிறது. அம்மா சொன்ன சொல்லைக் கேட்காமல் வெளியே வந்தது எவ்வளவு பெரிய பிழை என்று உணர்ந்து கொள்கிறது. உடனே தன் சொந்த வளைக்குச் செல்லும் வழியைத் தேடிக் கண்டுபிடித்து வேகமாகச் சென்று தாய் எலியின் வயிற்றோடு ஒட்டிக்கொள்கிறது. இதுதான் அந்தக் கதை.
Be the first to rate this book.