வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் நமது பாரம்பரிய நிலங்களுக்கு உரிமை கொடுப்பதோடு (பட்டா) சட்டப்பிரிவு 3(1)(i) மற்றும் 5 கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சிறுவன மகசூல், ஏரி, குளம், ஆறு மற்றும் பொதுவான ஆதாரங்களை பேணிப் பாதுகாத்து பயன்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்கிறது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கிராம மக்களுக்கும் கிராமசபைக்குமே உள்ளது. மக்கள் பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்கின்றது. முடிவெடுக்கும் அதிகாரமும் செயல்படுத்தும் உரிமையும் இவர்களுக்கே உள்ளது. இச்சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை இவர்களின் வாரிசுகளும் உறவினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Be the first to rate this book.