வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடியவர் ஓவியமேதை வின்செண்ட் வான்கா. உயிரோடு இருந்தவரை ஓர் ஓவியம்கூட விறக முடியாத வான்காவின் ஓவியங்கள், இன்று கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றன. வான்காவின் ஓவிய பப்படைப்புகளை நுணுக்கமாகப் பார்க்கிறபோது , அதில் நமக்குத் தெரிவது கலை அழகு மட்டுமல்ல; வான்கா என்கிற அந்த உன்னதக் கலைஞனின் வாழ்க்கையும்தான். வான்கா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரை ஒருவரும் மதிக்கவில்லை. அவருடைய திறமையைப் பாராட்டி நான்குவரி எழுதுவதற்குக்கூட யாருமில்லை. அவர் நிகழ்த்தி முடித்த அபாரச் சாதனைகளை யெல்லாம் யாரும் உணர்ந்திருக்கவில்லை. இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார் அந்த மகா கலைஞர். வான்காவின் படைப்புகள் மட்டுமில்லாமல் துயரம் நிறைந்த அவருடைய வாழ்க்கையும் கூட, நமக்குப் பல முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.
- என். ராஜேஷ்வர்.
Be the first to rate this book.