திருக்குறளை நவீன வசன கவிதை நடையில் எழுதப்பட்டு அழகிய வண்ணப் படங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட அரிய தொகுப்பு காவியக்கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரை வள்ளுவத்திற்கு வாய்த்த ஒரு நிலைக்கண்ணாடி வள்ளுவர் தோட்டம். ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒருசில குவளைகள் எடுத்து முப்பாலின் இறைச்சிப் பொருளை வசன கவிதையில் தனக்கே வசமாகி நிற்கும் தமிழ் நடைகொண்டு நமக்கு வழங்குகிறார். வித்தகக் கவிஞர் கலைஞரால் விளக்கப்பெற்ற என் இனிய இளவல் கவிஞர் பா.விஜய் அவர்கள், பூக்கூடைக்கு விளம்பரம் எதற்கு என்று ஒரு அற்புதமான வாக்கியம் வி.ஸ. காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலில் வரும், அதுபோல் என் தம்பி பா.விஜய்க்கு அறிமுகமோ விளம்பரமோ தேவையில்லை. இந்நூலில் எது எது எப்படி இருக்கிறது எனப் பட்டியலிட்டுப் பேசுதல் வெகு சிரமம். ஒரு கற்கண்டுக் கட்டியில் எந்தப் பக்கம் சுவைத்தாலும் தித்திக்கும். கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் அணிந்துரை, சூரியன் தொட்டால் பூ இதழ் மலர்கிறது. பறவையின் சிறகு விரிகிறது. இமை திறக்கிறது. வள்ளுவரின் தாக்கத்தால் பா.விஜயின் பூக்கள் மலர்கின்றன. சிறகுகள் விரிகின்றன. இமைகள் திறக்கின்றன. இரவு வானத்தில் தாரகைகள் கொட்டிக் கிடப்பதுபோல் நூலெங்கும் நவீன உவமைகள் ஒளி வீசுகின்றன...
Be the first to rate this book.