இத்தகு பெண்ணியமுடைய பெண்ணைப் பாராட்டிப் போற்றிய அருளியல் சார்ந்த தமிழ்ச்சான்றோர் பலர் உண்டு. அவருள்ளே அருட்புரட்சியாளரான வடலூர் வள்ளற்பெருமான், அனைவர் நெஞ்சங்களிலிருந்தும் ஒரு பெரிய உரிமைப் போரே நிகழ்த்தியிருக்கிறார் என்றே உணர்கின்றோம். அதற்குச் சான்றாக அவர் படைத்த திருவட்பா நூலும் உரைநடை நூலும் அமைகின்றன.
அவர் அறிவியல் நோக்கிலே பெண் பிறப்பிற்கான ஐம்பூதக் கூறுகள்பற்றியும்,உள்ளம், உடல் ஆகியவற்றின் இயல்புகள் பற்றியும் விளக்கியுள்ளார்.
Be the first to rate this book.