தமிழக மெய்ஞானிகளில் முக்கியமானவர் வள்ளலார். சைவ அறிஞராகவும் கவிஞராகவும் அறியப்படும் வள்ளலார், சாதிமத வேறுபாடுகளை மறுத்தவர். சமரச சன்மார்க்க நெறியை முன்னெடுத்தவர். சடங்குகளைத் தூற்றி, கடவுளை ஒளி வடிவில் போற்றியவர். வடலூரில் சத்தியஞான சபையை, சத்திய தர்ம சாலையை நிறுவி மக்களுக்கு வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் தீர்க்க முற்பட்டவர். இவ்வாறு பல்வேறு பரிமாணங்கள் கொண்ட வள்ளலாரின் வாழ்வை எளிமையாக அலசுகிறது இந்த நூல். வள்ளலாரின் பிறப்பில் தொடங்கி அவரின் குழந்தைப் பருவம், கல்வி, இல்லற வாழ்வு, ஆன்மிகப் பணி, இலக்கியப் பங்களிப்பு, சமூகப் பணி எனப் பல்வேறு கோணங்களில் ஆராய்கிறார் நூலாசிரியர் ஸ்ரீதேவி கண்ணன். வெறும் சம்பவங்களின் கோர்வையாக இல்லாமல் வள்ளலாரைச் சுற்றி நடைபெற்ற அதிர்வுகளையும் விவாதங்களையும் தக்க முறையில் கவனப்படுத்துகிறார். வள்ளலாரை எங்கிருந்து அணுகுவது என்று திகைத்து நிற்பவர்களுக்கு இந்நூல் ஒரு நுழைவாயிலாக அமையும்.
Be the first to rate this book.