பிழையில்லாத எழுத்து என்னும் நூல் விரிவின் விரிவு என்றால் வலிமிகுதல் என்னும் இந்நூல் அதன் எளிய வடிவம். “இலக்கணமா ? அது எனக்கு ஒவ்வாது” என்றிருப்பவர்கள் இந்நூலை நாடலாம். இதிலும் இலக்கணச் செய்திகள்தாம் கூறப்படும். அது இலக்கணம்தான் என்று கடுமை உணராதவாறு இருக்கும். கலைச்சொற்களால் தொடர்ந்து மிரட்டாமல் நகரும். என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அதனைத் தெரிவிக்கும். நம் பயன்பாட்டுக்கு, நாம் எழுதுகின்ற எழுத்துக்கு இந்த மட்டத்தில் போதும் என்றிருப்பவர்கள் இந்நூலை வாங்கலாம். பள்ளி கல்லூரி மாணாக்கர்கட்கு மிகவும் பயன்படும்.
Be the first to rate this book.