நீருக்குள் தவறவிட்ட கைப்பொருளைக் கண்டறியத் துடிக்கும் நீச்சலறியா மனதொன்றின் கர அளைதல்களென்றே தன் மொழியுள் ஆழ்ந்து சொற்களோடு திரும்பும் கவிதைகள் இவை. எந்தப் பரபரப்பும் இல்லாமல் பெருங்கூட்டத்துக்கு நடுவே கிடைத்த இடமொன்றில் அமர்ந்தவண்ணம் எதுவும் பேசாமல் தனிக்கும் நூதனத்தைத் தன் கவிதைகளினூடே கண்டறிந்து பகிர்கிறார் கவிஞர். வேலைப்பளுவுக்கு மத்தியில் மிகச்சன்னமான குரலில் தன்னையறியாமல் சீழ்க்கை பாதி சொல் மீதமென்று வெளிப்பட்டுவிடும் ப்ரியம் மிகு பாடலின் இடைவரித் தோன்றல்களாகவே பல நுண்ணிய அர்த்தச் சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன.பெயர்கள்-நிகழ்வுகள்-உணர்தல்கள் இம்மூன்றையும் அப்படியே அவ்வண்ணமே கதைப்படுத்துவது எளியது. அதுவே கவிதை என்று வருகையில் கடினமான சவாலாகப் பேருருக் கொள்வது. அத்தகைய சவாலைத் தன் முதல் தொகுப்பிலேயே நேர்த்திக் கொண்டு அனாயாசமாய்க் கடந்திருக்கிறார் சாய்வைஷ்ணவி. பொருட்படுத்த வேண்டிய புதிய கூறல்முறையைச் சர்வகாலமும் முனைகின்றன இக்கவிதைகள்.
Be the first to rate this book.