ஜெயமோகன் தன் தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுதி இது. 'நான் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல, ஒரு நடைமுறை வாய்ப்பாகவே கருதுகிறேன்.மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது. பிரிந்தால் குருதிப்பெருக்கே மிஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம் படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப் புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே. மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக் குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி' என்று ஜெயமோகன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Be the first to rate this book.