வானதி திருநாவுக்கரசு என்பவர் 1955இல் கல்கியின் நினைவாக, அவரதுப் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாத்திரங்களுள் ஒன்றான வானதி என்னும் பெயரையே தன் பதிப்பகத்துக்குச் சூட்டி, எல்லா வயதினருக்கும் ஏற்ற நூல்களை வெளியிடும் நிறுவனமாக, இப்பதிப்பகத்தை உருவாக்கினார். இதன் மூலம் பிரபல எழுத்தாளர்களின் புத்தங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்பதிப்பகத்தின் மூலம் இதன் பதிப்பாளரான வானதி திருநாவுக்கரசர் சிறந்த பதிப்பாளர் என்னும் விருதினைப் பலமுறை பெற்றிருக்கிறார்.
திரு.வி.க., ராஜாஜி, ம.பொ.சி., அறிஞர் அண்ணா, காமராஜர், கவிஞர் கண்ணதாசன், வாரியார் சுவாமிகள், நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நெ. து. சுந்தரவடிவேலு, எஸ்.ஏ.பி., சா.கணேசன், அ. ச. ஞானசம்பந்தன் என்று பலருடனும் நெருங்கிப் பழகிய இவர் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகளிடம் பக்தி கொண்டவர். இவர் பதிப்பாளர் என்பதோடு மட்டுமின்றி நல்ல தமிழ் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் விரிவான வாழ்க்கைச் சரிதத்தை வெற்றிப் படிகள் எனும் தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
வானதி பதிப்பகத்தின் நிறுவனர் ஏ.திருநாவுக்கரசு ஒரு குழந்தை எழுத்தாளரும் கூட குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை வானதி பதிப்பகம் வெளியிடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தது, பிரபலமான குழந்தை எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டது.
Be the first to rate this book.