பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன்வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி. பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக, பண்பாட்டுப் போராளியாகப் பரிணாமம் அடைந்ததை தமிழ்ச்செல்வன் நம்மை ஈர்க்கும் இயல்பான மொழியில் கூறிச் செல்வது ரசனைக்குரியது. வாசிப்பவரை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்காமல் அவரைத் தனது நெடும் பயணத்தடத்தில் கைகோர்த்து அழைத்துச் செல்வதில், சகபயணியாக உணரவைப்பதில் படைப்பாளி வெற்றி பெறுகிறார். அவருடைய எழுத்துகளின் வழியே விரியும் உலகத்தை அரை நூற்றாண்டுத் தமிழ்நில வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் நாம் கணக்கில் கொள்ளலாம்.
Be the first to rate this book.