யுத்தத்தால் சின்னாபின்னப்பட்டுப் போன ஒரு கடற்கரைச் சிற்றூரையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் ஒருவித ஏக்கத்துடன்தான் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இப்பதிவை அவர் மேற்கொண்டிராவிட்டால் ஓர் ஊரின் வரலாறு உலகிற்குத் தெரியாமல் போயிருக்கும். அதற்காகக் குருநகரின் இன்றையத் தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் மட்டுமின்றி நாமும் கூட ஆசிரியருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். தென்தமிழ் நாட்டுக் கத்தோலிக்க மீனவர்களின் வாழ்வியலைப் பதிவு செய்ய விரும்புவோருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் தன்மையது.
Be the first to rate this book.