நெய்தல் குடி வரலாறு நெடுகிலும் உழைக்கும் குடி. உயிரை நிர்பந்தம் வைத்து, தன்னையும் காத்து, சூழலைக் காக்கும் குடி என்பதாலேயே உரிப்பொருளை 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' என்கிறது தமிழ் இலக்கியம்.
கடல்சார் வாழ்வு என்பது கனதியான பொருண்மை உடையது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் நிச்சயத்தன்மை என்பது கேள்விக்குறி. வளமான கலாச்சாரமும் பண்பாடும் கொண்ட மீனவக்குடிகளின் வாழ்வியல் போராட்டத்தை இந்நூல் பதிவு செய்கிறது. உள்நாட்டு அயல்நாட்டு கடற்படை, தொழில் ரீதியான சிக்கல்கள், மீன்பிடி தடைக்காலம் இவ்வளவையும் தாண்டி மனிதர்கள் செத்து செத்து வாழ்கிறார்கள்... உயிர்ப்போடு!
அந்த உயிர்ப்பை "வலை"யின் வழி பேசியிருக்கிறது இக்குறுநாவல்.
1
Kalai 12-06-2017 04:02 pm
1
Arun 12-06-2017 03:58 pm