ஆராய்ச்சி, பதிப்பு எனும் இரு துறைகளிலும் தன் வாழ்வை முழுவதும் செலவிட்ட எஸ்.வையாபுரி, 21 நுால்களை வெளியிட்டுள்ளார்; 45 நுால்களை பதிப்பித்துள்ளார்.
வையாபுரிப் பிள்ளையைப் பற்றி எழுதியோர் எல்லாருமே, அவருக்குத் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பை, எழுதாமல் விட்டதில்லை என்று கூறும் ஆசிரியர், ‘எஸ்.வி., வடமொழி உட்பட, பல மொழிகள் அறிந்தவர்.
‘தமிழ் ஆய்வுக்குத் தேவையான மேலான பின்னணி உடையவர். தமிழ் மொழியின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பும், நேசமும் அவரது எழுத்துக்களை முழுவதும் படித்தோருக்கு மட்டுமே தெரியும்’ என, அவரது ஆய்வுகளை முழுமையாக வெளிக் கொணர்ந்துள்ளார்.
தொகை நுால்கள், ஐம்பெரும் சிறும் காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு, இலக்கணங்கள், நிகண்டுகள், கம்பன், சிவ புராணங்கள், சில நுால்கள், இடைக்கால நுால்கள் என, ஆறு பெரும் தலைப்புகளில் அவரது கால ஆய்வுகளைத் தொகுத்துத் தந்தருளினார்.
உதாரணமாக, ‘முருகாற்றுப்படை’ சங்க காலத்துக்குப் பிற்பட்டது. திருமுருகாற்றுப்படையை திருமுறையில் சேர்த்திருப்பதே இது பிற்காலத்தது என்பதை காட்டும் (பக். 11).
‘சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கி.பி., 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதியாகக் கூற முடியும்’ (பிற்காலப் பெயர்கள், 89 பட்டியலிட்டுள்ளார்) (பக். 26). தேவார மூவர்களுக்கும் மணிவாசகர் பிற்பட்ட காலத்தவர் (பக். 63).
‘திராவிட மொழிகளிலேயே முதல் அகராதி (11 ஆயிரத்து, 762 சொற்கள், 4,351 பக்கங்கள்) தமிழில் தான் வந்தது. எஸ்.வி.,க்கு, ‘ராவ் சாகிப்’ விருது கிடைத்தது இதற்கு தான் (பக். 104). வையாபுரி தான் வாழ்ந்த, 64 வயது காலத்தில், 45 ஆண்டு காலம் முழு நேர ஆய்வாளராக இருந்தபோதிலும், அவருக்கு பெரும் எதிர்ப்பும் இருந்தது.
‘வையாபுரியாரை வையாதார் யாருமில்லை’ என்பதை மாற்றி அமைக்கும் வகையில், அவரது ஆய்வுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டத்தக்கதாகும்.
Be the first to rate this book.