கல்கியில் தொடராக வந்த 'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களின் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல் தட்டுப்படுகிறது. மெல்லிய வெளிச்சம் ஓடும் கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிராமம் சட்டென்று சூழல் மாறிப் போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.
Be the first to rate this book.