இப்போது நம் கைகளில் தவழும் ‘வைணவக் கலைச் சொல் அகராதி’ அறிஞர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் அரிதின் முயன்று தொகுத்ததாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைணவ உரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு மேற்கொண்டவர் அவர். அத்துறையில் முன்னோடி ஆய்வாளரும் முன் முயற்சியாளரும் அவரே. அவரது ஆழ்ந்தகன்ற நுண்ணிய ஆய்வு 1987-இல் ‘வைணவ உரைவளம்’ என்னும் பெயரில் பாரிய நூலாகவும் வெளிவந்தது. ‘கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது’ போன்ற பெருமுயற்சி அது.
எனவே கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்களால் ‘ஆய்வுக்குப் படிச்சந்தம்’ என்று பாராட்டப் பெற்ற பெருமைமிக்கது. அந்நூலில் பின்னிணைப்பாக இடம் பெற்ற ‘மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும்’, ‘அருந்தமிழ்ச் சொற்களின் அகரவரிசை’ ஆகிய இரண்டை மட்டும் இணைத்து ‘வைணவக் கலைச் சொல் அகராதி’ என்னும் பெயரில் தனியொருநூலாக இப்போது வெளியிட்டுள்ளார்.
- பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்
Be the first to rate this book.