நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் கருங்காடு, உள்காடு என்று சொல்லப்படும் வனங்களில் அழகு மொத்தமாக கொட்டிக்கிடக்கிறது. அடர்வனங்களின் உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக சிவசைலம், குற்றாலம், புளியங்குடி, சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தேக்கடி, கொடைக்கானல் சார்ந்த வனங்களில் தங்கி பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு இந்த சிறுவர் நாவல் எழுதியுள்ளேன். எத்தனை நாடுகளை சுற்றிப்பார்த்தாலும் சரி, எத்தனை டிஸ்னி லாண்டுகளை சுற்றிப்பார்த்தாலும் சரி, வனங்களைச் சுற்றிப் பார்த்த பேரானந்தம், பெருமிதம் கிடைக்காது. ‘வைத்தியர் மாருதி’ என்ற இந்த நாவலில் வன அதிசயங்களை உங்களுக்கு அதிகமாகவே தந்துள்ளேன்.
Be the first to rate this book.