1935ஆம் ஆண்டு பிறந்த எஸ்.வைதீஸ்வரன், நவீனச் சிற்றிதழ் இலக்கியத்தின் முன்னோடியான ‘எழுத்து’வில் தமது தடத்தைப் பதிக்கத் தொடங்கி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகளில் மட்டும் அல்லாமல் சிறுகதைகளிலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் இன்றுவரை இயங்கிவருபவர். தமக்குள் ஒரு ஓவியத்தின் வண்ணக் கலவைகளையும், கவிதையின் படிம மொழியையும், நிதர்சன வாழ்வியல் தரிசனத்தையும், கண்ணுக்குப் புலப்படாத ஒரு தத்துவத் தேடலையும் அவரது ஒவ்வொரு சிறுகதையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒரு நீண்ட ஆயுட்காலத்தின் வாழ்வனுபவங்களை நுண்மையான மனிதநேயப் பார்வையுடன், வாழ்வைப் பற்றிய ஆழ்ந்த தரிசனங்களை உணர்த்தக்கூடிய சாத்தி யங்கள் கொண்டிருப்பவையாக அமைந்துள்ளன.
Be the first to rate this book.