சமூகநீதிக்கான வகுப்புரிமை தீர்மானத்தை 1925இல் நடந்த காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் முன்வைத்தார். தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆறு ஆண்டுகள் காங்கிரஸ்காரராக உழைத்த பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். அன்று வேர்பிடித்த திராவிட இயக்கம் இன்றுவரை தமிழகத்தில் சமூகநீதியை கட்டிக்காத்து வருகிறது.
பெரியாரின் வகுப்புரிமை தீர்மானத்தை எதிர்த்து ‘திரு.வி.க. நவசக்தியில்’ அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். அவற்றை மறுத்து, பெரியார் எழுதிய கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்தன. திரு.வி.கவுக்கும் பெரியாருக்கும் நிகழ்ந்த இந்த அரசியல் யுத்தத்தில் தீட்டப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.