சந்திராவின் 'வேறு வேறு சூரியன்கள்' தொகுப்பின் கவிதைகள் பிரமாண்ட காலவெளிக்குள் உணர்வுகளைக் கட்டமைத்து வெளிப்படுகின்றன. அவை வெறுமனே கற்பனைகளால், வெற்று வித்தைகளால் நிரப்பப்படாமல் வாழ்வின் கூறுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. படிமங்களாலும், உரையாடல்களாலும் இந்தக் கவிதைகளில் காட்சிகளாய் விரியும் நாடோடித் தன்மையும், நிலமும் புதுமையாக இருக்கின்றன. சூரியன் இந்தத் தொகுப்பு முழுவதும் ஒரு சிறுமிக்குப் பின்னேயே வரும் தந்தையைப் போல வந்து கொண்டிருக்கிறது. எந்தவிதமான அதிகபிரசங்கித்தன வேலையையும் செய்யாமல் இயல்பை இயல்பாய்க் காண்பிக்கும் சந்திராவின் 'வேறு வேறு சூரியன்கள்' கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தபோது வெளிச்சமான வாழ்வை வாழ்ந்துவிட்டு வந்ததைப்போல் இருந்தது..
- ச. துரை
Be the first to rate this book.