”அண்டம் எவ்வாறு உருவானது? ஐம்பூதங்கள் எப்படி இயங்குகின்றன? படைப்பு எப்படி நிகழ்ந்தது?” எனும் கேள்விகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மெய்த்தேடல் கொண்டவர்களால் கேட்கப்பட்டன.
படைத்த பொருட்களைப் புரிந்துகொள்வதன் வழியாக, அப்பொருட்களின் அங்கமாகவே இருக்கும் தம்மைப் புரிந்துகொள்வதன் வழியாக படைத்தவனைப் புரிந்துகொள்ளும் வேட்டலே இக்கேள்விகளுக்கான அடிப்படை. நம் மரபில் பலர் இம்மறை பொருட்களை உணர்ந்து பதிவு செய்தனர். சூழல்களுக்கு ஏற்ப இம்மறை பொருட்கள் இறையால் மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தப்பட்டன.
இது ஓர் ஊழிக்காலம். இவ்வூழிக்காலத்தில் படைப்பின் மறை பொருளை எளிமையாகவும் ஆழமாகவும் ”வடிவு நூல்” எனும் நூல் வழியாக ஆசான் ம.செந்தமிழன் வெளிப்படுத்திப் பதிவு செய்திருக்கிறார்.
மூலமாகிய உணர்விலிருந்து கோலம் (அண்டங்கள்) விரிவதை ஒவ்வொரு படிநிலையாக இந்நூல் விளக்குகிறது. விளக்கம்தான் படிநிலையே தவிர ஆக்கமும் அழிவும் இதை எழுதும் இக்கணத்திலும் நிகழ்ந்துகொண்டே உள்ளன என்பதையும் இந்நூல் உணர்த்தியே வழிநடத்துகிறது.
வடிவு நூல் ஐந்து இயல்களைக் கொண்டது. இவ்வியல்களின் உள்ளடக்கங்கள் நுண்மையிலிருந்து பெருமை நோக்கி விரிபவை. ஆதி நிலையிலிருந்து அணுக்கள் வெளிப்படுதலையும், அணுக்கள் வடிவங்களாக சேர்க்கை கொள்ளுதலையும், பரப்பு மற்றும் கால அமைவையும் பெரு வடிவங்களான அண்டங்களின் அமைவு மற்றும் எல்லை பற்றியும், விரிந்து செல்லும் வெளி மீண்டும் மூலத்தில் ஒடுங்குதலையும் செறிவான இலக்கணங்கள் மற்றும் எளிமையான விளக்கங்கள் வழியாக இந்நூல் விவரித்துச் செல்கிறது.
Be the first to rate this book.