தமிழில் கலந்துள்ள வடசொற்களை அறியும் முறைகளைப் பற்றிய விளக்கமான கையேடு. இதுவரை மொழியியலில் செயல்பட்டவர்கள் வடசொற்கள் இவை என்ற பட்டியலையும் அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்களையும் தொகுத்துத் தந்தார்கள். அது ஏன் வடசொல் என்று கண்டறியும் அறிவை நமக்குப் புகட்டவில்லை. அப்படியெல்லாம் யாரும் கற்றுத் தந்துவிடமாட்டார்கள். இந்நூல் அதனை வெளிப்படுத்தும். முகநூலில் பல பகுதிகளைத் தொடராகவும் இதுகாறும் படித்துப் பார்த்திருப்பீர்கள். இனி மீதமிருப்பவற்றை எனக்குத் தோன்றினால் இங்கே தருவேன். இல்லையேல் புத்தகத்தை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இச்சொல் இதனால் வடசொல் என்று ஒரு மொழியறிஞர் எப்படி அணுகுவாரோ அப்படி அணுகக் கற்றுக்கொள்ளலாம். நம் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பல வடசொற்களை அறிந்து களையலாம். சிறிய நூல்தான். அதன் விளைவு வேறு வகையில் இருக்கும்.
Be the first to rate this book.