வயசாளிகளும் இளைஞர்களும் அவரவர் கற்பனா சக்திக்குத் தக்கவாறு அலிமாவுக்குப் பல வேடங்கள் தந்து மகிழ்ந்தனர். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சிஐடி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகவாதி, சினிமா வாய்ப்புத்தேடி சோரம் போனவள்… இவ்வாறு பலவிதமான கேரக்டர்கள், அலிமா மேற்படி பட்டியலிலுள்ள ஒவ்வொரு வேடத்துக்கும் பொருந்துகிறவளாகவே இருந்ததும் சுவாரசியமான விஷயமே.
இவை நீங்கலாக வாசகர்களும் அலிமாவைக் குறித்த பலவிதமான புனைவுகளை உருவாக்கத் தொடங்கினர். எல்லாவற்றையும் கேட்டும் வாசித்தும் அறிந்துகொண்ட வடக்கேமுறி அலிமாவுக்கோ ஒரே களிப்பாட்டம், ஒரே களிக்கூத்து.
Be the first to rate this book.