பண்டைய கால ரோமாபுரியில் ஆண்டானுக்கும் அடிமைகளுக்கும் இடைவிடாத வர்க்கப்போராட்டம் நடந்தது. நாட்டின் பலமும் பொருளாதார சக்தியும் வளர்ந்த ஒவ்வொரு சமயத்திலும் மேற்படி போராட்டமும் தீவிரமாயிற்று. அதனால் எல்லா வர்க்கங்களும் தங்களுடைய நிலையை உயர்த்திக்கொள்ளமுடிந்தது. சில சமயங்களில் அப்போராட்டம் எல்லை மீறிப் போய்விட்டது. இதனாலும், பல வெளிசக்திகளின் தாக்குதலாலும் சமுதாயம் நிலைகுலைந்து சமத்துவம், நீதி ஆகியவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு வழுவான ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்ற கோரிக்கை கிளம்பியது. இப்படி ஜாதி வர்க்கமாகவும், வர்க்கம் ஜாதியாகவும் பலதடவை மாறியிருக்கிறது. இந்த மாறுதல் படிப்படியாகவே நடந்திருக்கிறது. ரோமாபுரியின் செல்வத்தையும், அதிகாரத்தையும் பெருக்குவதற்கு ஜாதிகளே ஒரு காலத்தில் கருவிகளாக இருந்திருக்கின்றன. மேல் தரத்தினருடன் சம அந்தஸ்து பெற வேண்டுமென்று சாதாரண ரோமாபுரி பிரஜை நினைத்தான். அதுவே வர்க்கப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது. பெற்றதைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கும் சமுதாய சீர்குலைவைத் தடுப்பதற்கும் பிறகு ஜாதி பயன்பட்டது. ஆனால் எவ்வளவு முயற்சித்தபோதிலும் ஜாதி அஸ்திவாரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமுதாயம் எதுவும் நீதியின் நிலைக்களனாக விளங்கமுடியாது.
- ராம் மனோகர் லோகியா
Be the first to rate this book.