எதிரிகளின் ஒற்றுமையைக் கெடுத்துப் பிரித்தல், சம நட்போடு பகையின்றி வாழ்தல், பகைவரை உறவு செய்து வெல்லுதல், கிடைத்த உறவையும் பொருளையும் கெடுத்துக் கொள்ளல், தீர விசாரிக்காமல் முடிவெடுத்தல் ஆகிய ஐந்து தந்திரங்களும் முறையே, மித்திர பேதம், சுகிர்லாப தந்திரம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம் பிரேக்ஷிய காரியத்துவம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். இக்கதைகள் யாவும் பழங்காலத்தில் சொல்லப்பட்டு வந்த நீதிக் கதைகள் என்றாலும், என்றென்றும் படித்து நினைவில் நிறுத்த வேண்டிய வாழ்க்கைப் பாடம். தீமைகளால்தான் என்றைக்கும் நன்மை விளையக்கூடும் என்ற உண்மைத் தத்துவத்தை இதிலுள்ள அனைத்துக் கதைகளும் விளக்குகின்றன. சிறுவர் மட்டுமல்ல, பெரியோர்களும் படித்தறிய வேண்டிய நீதிநெறிக் கருவூலம். இதிலுள்ள 86 கதைகளுக்கும் உரிய படங்கள், முழு பக்கத்தில் வெளிவந்துள்ளது அறிவுக்கு அறிவும், அழகுக்கு அழகும் சேர்த்துள்ளன. பள்ளி நூலகங்கள் அனைத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.
Be the first to rate this book.