மெய்யறிவு உணர்வை, சமயக் குழுக்கள், பல்வேறு பிரிவுகள் தெரியப்படுத்துவதுபோல் அன்றி, கிருஷ்ணமூர்த்தியின் அணுகுமுறை ஒருவகையில் நிஜமாகவே மதச்சார்பற்ற தன்மை படைத்தது. ஆயினும் ஓர் ஆழ்ந்த மெய்யறிவு பரிமாணத்தை (dimension) அளிக்கிறது. ஆசிரியருக்கும், மாணவருக்கும், குருவுக்கும், சிஷ்யனுக்கும், இடையே உள்ள உறவின் மரபுவழி அணுகுமுறையிலிருந்து கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் வேறுபட்டு இருக்கின்றன. ஆசிரியர் என்பவர் அறிந்தவர், மாணவன் என்பவர் அறியாதவர், கற்பிக்கப்பட வேண்டியவர் என்று அடிப்படையிலேயே, உயர்வு, தாழ்வு உள்ள அணுகுமுறை மரபுவழி அணுகுமுறை. கிருஷ்ணமூர்த்தியின் அணுகுமுறையில் ஆசிரியரும், மாணவரும் சமநிலையில் செயற்பட்டு, கேள்வி அதற்கு மாற்றுக் கேள்வி என்ற முறையில் தொடர்பு கொண்டு, ஒரு பிரச்சினையின் முழு ஆழத்தையும் வெளிக்கொண்டு வந்து புரிந்து கொள்வதின் மூலம் இருவர் மனமும் ஒளி பெறுவதே.
Be the first to rate this book.