செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது.
1968இல் செக்கோஸ்லோவேகியாமீதான சோவியத் படையெடுப்பின் பின்னணியில் அமைந்த இந்த நாவல், நேர்க்கோட்டில் அமையாத ஏழு பகுதிகளாகக் கொண்டது.
வாழ்க்கையின் பொருளைக் கண்டறிய இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மேற்கொள்ளும் போராட்டத்தை இந்நாவல் பின்தொடர்கிறது. வாழ்க்கை குறித்த மாறுபட்ட தத்துவ அணுகுமுறைகளை இவர்கள் வழியே குந்தேரா ஆராய்கிறார். நீட்சே போன்றோரின் தத்துவப் பார்வைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார். மனித இருப்பின் தெளிவின்மையையும் முரண்பாடுகளையும் இந்நாவல் அலசுகிறது.
Be the first to rate this book.