ஒரு இனிமையான மகிழ்ச்சியான ஆன்மா என்பது அனுபவத்தாலும் மெய்யறிவாலும் கனிந்து இருப்பதாகும். வலிமையான ஆற்றலுடன் பரவுகின்ற அதன் தாக்கம் கண்களுக்கு புலப்படாது இருந்தாலும் அந்த தாக்கத்தின் நறுமணம் மற்றவர்களின் இதயங்களில் அகமகிழ்வை ஏற்படுத்தும், உலகை பரிசுத்தப்படுத்தும். உண்மையான மனிதத்துவத்தின் மாண்பும் பெருமையும் என்பது இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வது தான். அப்படி வாழ வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டால், இதுவரை அப்படி வாழாதவர்கள் அப்படி வாழ விரும்பினால், யார் வேண்டுமானாலும் இந்த நாள் முதல் அப்படி வாழத் தொடங்கலாம். உங்களது சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கின்றன என்று கூறாதீர்கள். ஒரு மனிதனது சூழ்நிலை எப்போதுமே அவனுக்கு எதிராக இல்லை, அவனுக்கு உதவுவதற்காகவே அது அப்படி இருக்கின்றது. எந்த வகையான புறச்சூழ்நிலைகளால் நீங்கள் உங்கள் இனிமையையும் மன நிம்மதியையும் இழக்கின்றீர்களோ, அது தான் உங்கள் வளர்ச்சிக்கு மிக தேவையானதாகும். அவற்றை எதிர்கொண்டு மீளூம்போது மட்டும் தான் நீங்கள் கற்க முடியும், வளர்ந்து கனிய முடியும்.
Be the first to rate this book.