வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு எஞ்சி வாழ்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். “ஏன் வாழவேண்டும் என்பதற்கு ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும் மனிதன், எப்படியாவது எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வான்” என்ற நீட்சேயின் வார்த்தைகள் அறிவார்ந்த ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.
- விக்டர் பிராங்கல்
Be the first to rate this book.