வாழ்வரசி என்ற இவ்வறிய புதினத்தை எழுதியவர் ஹேஸலின் என்ற சீனப் பெண்மனி ஆவார்.
அவர் இப்புதினத்தில் சீனாவின் பழைய நாகரீகத்தையும் புது யுகத்தின் புதுமையையும் சந்திக்க வைக்கின்றார். இரண்டின் தன்மையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையும் உள்ளன.
இந்த நல்ல தத்துவத்தை விளக்கும் இந்நூல் தெளிந்த நீரோடையை போல் சலசலத்துச் செல்கிறது. படிப்பவர் உள்ளத்தில் இனிமையையும் அமைதியையும் பெய்கிறது.
இந்நூலில் சுவைமிக்க சம்பவங்கள் நிறைந்த ஒரு வரலாற்றையும், உள்ளத்தின அடித்தளத்தில் உணர்ச்சியை கிளறும் நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு புதினத்தையும் காணமுடிகிறது. அத்துடண் சீனாவின் அறிவையும், ஆண்மாவையும் பார்க்கமுடிகிறது.
ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூலை அப்துற் - றஹீம் அவர்கள் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். அப்துற் - றஹீம் அவர்கள் 65 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்து இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நல்ல நூலை தமிழ் பெருமக்களுக்கு அளிப்பதில் பெறுமகிழ்வு அடைகின்றோம்.
Be the first to rate this book.