சொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவை எல்லாம் நன்றாகவே நடந்தன; நடக்கின்றவை எல்லாம் நன்றாகவே நடக்கின்றன; நடக்க இருப்பவை எல்லாம் நன்றாக நடக்கும்; அவ்வழி இறைவன் வழி என்று உணர வேண்டும். இத்தகைய நன்னம்பிக்கை எண்ணங்களை உருவாக்குகின்றன இச் சகோதரரின் கதைகள். ஒரு புத்தாயிரமாண்டை முறையாக பதிவு செய்ய இன்றைய நவீன வரலாறு எவ்வாறு தயாராகிறதோ அவ்வாறே மனிதத் தத்துவம் தனது எல்லாக் கூறுகளிலும் நல்லதை நேசிக்கவும், நல்லதைப் போற்றிப் புகழவும் விழைகிறது. எனவே, நீங்கள் நன்மையைச் செய்து, நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அவ்வாறு இயங்குவதற்கு இந்த நூல் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை
Be the first to rate this book.