சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:
• பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர்.
• மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.
• பெற்றத் தந்தையையே நாதியற்றவர் என்று கூறி அவரை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் ஓர் அற்ப மனிதர்.
இது போன்ற பலவிதமான மனிதர்களை சுதா மூர்த்தி இதில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய எளிய நடையும் நேரடியாக விஷயத்திற்கு வரும் பாங்கும் வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
சுதா மூர்த்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலுள்ள ஷிகாவுன் என்ற ஊரில் 1950ம் ஆண்டு பிறந்தார். அவர் கணினி அறிவியலில் எம்.டெக் படித்துள்ளார். அவர் தற்போது இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் எழுதியுள்ள புதினங்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் இதரக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவருடைய புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆர்.கே. நாராயண் விருது (2006), பத்மஸ்ரீ விருது (2006), கர்நாடக அரசால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற அட்டிமாபே விருது (2011) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
Be the first to rate this book.