உள் நாட்டுச் சண்டைகளும், தொற்றுநோயும், பஞ்சமும் நிறைந்த ஆண்டுகளில் இறந்த அனாதைகளும், யுத்தச் சூறாவளியால் நாடு முழுவதும் சிதறடிக்கப்பட்டவர்களுமான அகதிகளின் குழுந்தைகளே தெருச்சுற்றிகளாக ஏ.எஸ். மகரெங்கோவின் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தனர். கடுமையாகவும், மோசமாகவும் வாழ்க்கை நடத்தி வந்த அக்குழந்தைகளுக்கு மறுகல்வியளித்து, அதிசயிக்கத் தக்க மாற்றம் ஏற்படுத்தியவர் ஏ.எஸ். மகரெங்கோ. குடியிருப்பின் அமைப்பாளரும், கண்காணிப்பாளரும் அவரே. இளங்குற்றவாளிகளின் வாழ்க்கைப் பாதையில் கல்வி ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. அந்த வரலாற்றை ஒரு கல்விக் காவியமாகப் படைத்தளித்திருக்கிறார் மகரெங்கோ. இது முதல் நூல். தமிழில் இதை மொழிபெயர்த்துள்ளவர் புகழ்மிக்க நாவலாசிரியர் பென்னீலன்.
Be the first to rate this book.