புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதுநெறியின் பல கூறுகளுள் சில தனித்தனியே வளர்ந்திருக்கிறது. “வாழையடி வாழையாக” இந்நெறி இப்படித்தான் தொடர்கிறது. இவற்றை எல்லாம் விளக்குமுகமாக அமைந்தவைதாம் இந்நூலில் உள்ள கட்டுரைகள்.
Be the first to rate this book.