சிறந்த நடிகர், முதல்தர இயக்குநர். தேர்ந்த எழுத்தாளர் வசீலி ஷூக்ஷீன் (1929-1974) பல்வேறு துறைகளில் தம் கைவண்ணத்தைக் காட்டி விரைந்த வெற்றிகள் பெற்றார். மக்களது சுபாவங்களையும் எல்லா வகையான வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கதைகளையும் வரலாறுகளையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். வசீலி ஷூக்ஷீன் மக்கள் எழுத்தாளர் -அச்சொல்லின் பழைய அர்த்தத்தில் என்று அவரைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதின. வாழ்நாளின் இறுதிப் பத்தாண்டில் ஷூக்ஷீன் இயற்றிய சிறந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன."
Be the first to rate this book.