'வாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பண்ணையூர் என்ற கிராமத்தில் உள்ள மிஷனரி ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். கிராம மக்களுடன் ஒன்றி எளிமையாக வாழ்ந்தார் வாத்தியார். அவர்களது சுக துக்கங்களில் பங்குகொண்டு அவர்களுக்குச் சாத்தியமான உதவிகளைச் செய்தார். சாதி மத பேதமின்றி அனைத்துக் கிராம மக்களையும் ஒன்று திரட்டியது வாத்தியரின் பணிகள். நாட்டுப்பற்றும் சேவை உணர்வும் கொண்ட தன்னலமற்ற ஒரு வாலிபர் தமது சீரிய பணிகளால் கிராம மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்பதை இந்த நவீனம் நன்கு சித்திரிக்கிறது. வாத்தியாரின் அபார வளர்ச்சி வியப்பூட்டுகிறது. வாத்தியார் நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது.
Be the first to rate this book.